திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான இளைஞர் கையுந்து பந்து போட்டி மைதானத்தை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி. கலைவாணன் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூண்டி நினைவு கையுந்து பந்து கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட கையுந்து பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான இளைஞர் கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டி 12 -02 -2026 முதல் 15- 02 -2026 வரை நடைபெற உள்ளது. .
இந்தப் போட்டியின் முதற்கட்டமான விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தார் .
இந்த போட்டியில் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் இருந்து ஆண்களும் 28 மாவட்டங்களில் இருந்து பெண்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 900 ஆண்கள் பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து பூண்டி கலைவாணன் அவர்கள் கூறியதாவது.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை நகராட்சிதுறை அமைச்சர் நேரு அவர்கள் வழங்குவார்கள் என்றும் இந்திய துணை கண்டத்திலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருப்பது போல விளையாட்டுத் துறையிலும் முன்னணி வைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சி மிகவும் உதவியாக உள்ளது.
ஒவ்வொருவர் தகுதிக்கேற்ப அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது என்றும் போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் மேலும் இந்த போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கண்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பேட்டி பூண்டி கலைவாணன் சட்டமன்ற உறுப்பினர்.

















