திருவாரூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான திருவாரூர் கோட்டாட்சியர் சத்யாவிடம் திமுக வெற்றி வேட்பாளர் பூண்டி கலைவாணன் கூட்டணி கட்சியினருடன் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி வேட்பாளர் பூண்டி .கலைவாணன் திருவாரூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதன் தொடர்ச்சியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி சத்யாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செயது பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
வேட்பு மனுவை தாக்கல் செய்த திமுக வேட்பாளருடன் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.
