செம்பனார்கோவிலில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் விஜயாலயன் அறிமுக கூட்டம். தவெக தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க அறிவுறுத்தல்:-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவிலில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் விஜயாலயன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் சீர்காழி தனித் தொகுதி வேட்பாளருமான கோபிநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக வேட்பாளர் விஜயாலயனை கிளைக் கழகச் செயலாளர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் தொண்டர்கள் அனைவரும் வேட்பாளர் விஜயாலயனை வெற்றி பெற செய்ய வாக்கு சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஏற்புரை வழங்கிய தவெக வேட்பாளர் விஜயாலயன் பேசுகையில் தொண்டர்கள் அனைவரும் 2கே கிட்ஸ் இளைஞராக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அனைவரும் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் ஆக்குவதற்கு பாடுபட வேண்டும் என்றும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவளித்து தவெக தேர்தல் அறிக்கையை வீடு வீடாக சென்று வழங்கி வாக்கு சேகரித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் தவெக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.















