மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,87,390 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 443 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
தரங்கம்பாடி தாலுக்கா கீழையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், எம்.பி ஆர்.சுதா, எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), பன்னீர்செல்வம் (சீர்காழி), ராஜகுமார் (மயிலாடுதுறை) எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 3000ரூபாய் ரொக்க பரிசினை பெற்றுச் சென்றனர்.

















