மயிலாடுதுறையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் கலை விழா இரண்டாம் நாள் நிகழ்வில் பரதம், நாட்டுப்பற கலைநிகழ்ச்சிகள், மது போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நாடக நிகழ்வுகள் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றது;-
மயிலாடுதுறை மாவட்டத்தில் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும், மது போதையால் குடும்பம் எப்படி சீரழிந்து சின்னாபின்னமாகிறது என்பதை எடுத்துக்கூறி மதுபோதையின் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நாடகம் அனைவரின் பாராட்டை பெற்றது. தொடர்ந்த கருப்பசாமி நடனம், குழு பம்பை மேளம். நாட்டுப்புற பாடல் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.













