பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை . 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு.
திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (29). இவர் 2ம் நிலை காவலராக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு கரோனா காலத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார் இவர், அங்கு பணியாற்றி வந்த பெண்ணொருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார்.
பின்னர், திருமணத்துக்கு சதீஷ் மறுத்து விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், விசாரணை முடிந்து இன்று நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.
அவர், தனது தீர்ப்பில் சதீஷூக்கு 28 வருடம் 3 மாதம் சிறைத்தண்டனையும் ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து இதை 14 வருடம் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அபராத தொகை மற்றும் அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கபட வேண்டுமெனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சிறைத்தண்டனை பெற்றுள்ள சதீஷின் தந்தை சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வழக்கு நடைபெற்ற நிலையில் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் இருவரும் பிரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது .
