திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக எஸ்.பி உத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர் மீது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி தாலுக்கா தலையுடையவர் கோயில் பத்து கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி செந்தாமரை.இவருக்கு ஜெயமோகன்.தருமசீலன் மற்றும் சிலருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி செந்தாமரை வீட்டில் புகுந்து எதிரிகள் வீட்டை உடைத்து, வீட்டில் இருந்த 13 பவுன் தங்க நகைகளையும்,ரூ.60 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.இச்சம்பவம் குறித்து செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் செந்தாமரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் அளித்தார்.அவரின் பரிசீலனையின் பேரில் மீண்டும் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு சென்ற அவரை காவல் ஆய்வாளர் கருணாகரன் மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட செந்தாமரை இன்று மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று காவல் நிலையத்தில் என் சாதியை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர் கருணாகரன் மீது
எஸ்.சி/எஸ்.டி சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்து உள்ளார்
