மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பெரம்பூர் காவல் சரகம், கொடவிளாகம் அருகே மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, காரைக்கால் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த, பனங்குடி காலனித் தெருவை சேர்ந்த எழிலரசன் (25), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 400 புதுச்சேரி சாரய பாட்டில்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். எழிலரசன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
பொதுமக்கள், மதுவிலக்கு குற்றம் சம்மந்தமாக புகார்களை இலவச உதவி எண் 10581 மற்றும் 8870490380 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், ரகசியம் பாதுகாக்கப்படும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
