கரூர் விவகாரத்திற்கு பின்னர் தனியார் இடங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.மக்கள் கூடும் இடங்களில் தான் கூட்டங்களை நடத்த முடியும். எங்களைப் போன்ற கட்சிகளுக்கு பொருளாதார வசதி கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தவறிவரும் திமுக அரசு சமூக நீதி குறித்து பேசுவதற்கு தகுதியற்றது. சமூக வலைதளத்தில் கூட்டணி குறித்து பரவும் தகவல்கள் தவறானது .கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நான்தான் அறிவிப்பேன் விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். விஜய் உடன் பாமக கூட்டணியா என்பது போகப் போக தெரியும் என நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
பாமக தலைவர் அன்புமணி கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார் பயணத்தின் ஒரு பகுதியாக நிலைக்கு வருகை தந்த அவர் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கடப்பதை நேரில் ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடி தாமிரபரணி நதியை பாதுகாக்க தவறிய தமிழக அரசு மற்றும் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தாமிரபரணி நதியில் குளித்தால் பல்வேறு மோசமான நோய் வரும் அபாயம் இருந்து வருகிறது.அனைத்து விதமான திட கழிவுகளும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பல்வேறு முயற்சிகளை பாமக சார்பில் மேற்கொண்டு வருகிறோம்.அற்றை காக்க தகுதியற்றவர்கள் ஆட்சியில் இருக்காதீர்கள்.நீதிபதிகள் ஆய்வு செய்தபின்னரும் தாமிரபரணி அப்படியேதான் உள்ளது.கூவத்தை தாமிரபரணியாக மாற்ற கேட்கவில்லை.தாமிரபரணி நதியை கூவமாக மாற்ற வேண்டாம் என்று தான் கேட்கிறோம்.தாமிரபரணி காக்கபடாதது வெட்ககேடு அவமானம்.ஆதிச்சநல்லூர் 5000 ஆண்டு பழமையானது.மத்திய அரசு தாமிரபரணி நதியை பாதுகாக்க நிதி ஒதுக்கவேண்டும்.முதலமைச்சர்,பொறுப்பு அமைச்சர் சபாநாயகர் ஆகியோர் நதியை பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும்.திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் தான் கூவம் சாக்கடையாக மாறியது.தமிழகத்தில் சாதிவாறி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தவேண்டும்.நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம் அது ரத்தானால் அதற்கு முதல்வர் தான் பொறுப்பு.
மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது.ஜாதிவாரிகணக்கெடுப்பு நடத்தவேண்டாம் சர்வேவாவது நடத்துங்கள்.ஜாதி என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் கலைஞர் பெயரிலாவது கணக்கெடுப்பை நடத்துங்கள் .ஏன் பயப்படுகிறீர்கள் ஏன் இந்த கோளைத்தனம்.கர்நாடக போன்ற மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தும் நிலையில் சமூக நீதி பற்றி திமுக பேசுவதற்கு தகுதி இல்லை.இருமல் மருந்து விவகாரத்தில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை கைது செய்து என்ன பயன்.மருந்து கட்டுபாட்டு அதிகாரி, மருந்து உற்பத்தி நிறுவனம் போன்றவையை கைது செய்யவேண்டும்.மருந்து நிறுவனங்களை கட்டுபடுத்தவேண்டியது மாநில அரசின் கடமை.
கூட்டணி குறித்து விரைவில் நானே அறிவிப்பேன்.வதந்திகள் யாரும் நம்ப வேண்டாம்.அதிகாரப்பூர்ப அறிவிப்பு வெளியே வரும்.மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார்.அவரை நான் பார்க்காததை வைத்து அரசியல் செய்கிறார்கள்.அதுபோன்று பேசி கொச்சைபடுத்தவேண்டாம்.இன்று ராமதாஸ் டிஸ்சார்ஜ் ஆகிறார்.கரூர் விவகாரத்திற்கு பின்னர் பல கட்டுபாடுகள் நீதிமன்றம் விதித்துள்ளது.தனியார் இடத்தில் கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.அது போன்று எங்களால் செயல்பட எங்களிடம் பொருளாதர வசதி கிடையாது.மக்களை சந்தித்தால் தான் போராட்டம் நடத்தமுடியும்.இந்தியாவில் எங்கும் இல்லாத நிபந்தனைகள் தமிழகத்தில் மட்டும் ஏன் உள்ளது.விஜயுடன் பாமக சேருமா என்பது போகபோக தெரியும் என தெரிவித்தார்.