சுதந்திர தினத்தை முன்னிட்டு புறா போட்டி.. 24 மணி நேரம் பறக்கனும்..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் 20ம் ஆண்டாக புறா போட்டி நடைபெற்றது.

கோவை புலியகுளம் பகுதியில் ஆண்டுதோறும் கூண்டுகளில் வளர்க்கப்படும் புறாக்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் புலியகுளம் பீஜியன் பிரண்ட்ஸ் அசோசியேசனின் சார்பில் 20வது ஆண்டு புறா போட்டிகள் புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 16 கூண்டு அணிகள் பங்கேற்றன. 32 புறாக்கள் போட்டியில் பங்கேற்றன. முன்னதாக புறாக்களுக்கு போட்டி அடையாளமாக ஒருங்கிணைப்பாளர் பாபு சீல் வைத்து தேசிய கொடி வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு புறா உரிமையாளர்கள் புறாக்களை பறக்க விட்டனர். இந்த சாதா புறாக்கள் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் பறக்க வேண்டும். இந்த புறாக்கள் நாளை காலை 7 மணிக்குள் கூண்டில் அமர நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து முதல், இரண்டு, மூன்று, நான்காம் பரிசுகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த புறாக்கள் கூண்டில் அமர்வதை கண்காணிக்க போட்டி நடத்துபவர்கள் சார்பில் கண்காணிப்பாளர்கள் கூண்டருகே இருந்து புறாக்களை தேர்வு செய்வார்கள்.

Exit mobile version