திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை மனு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட மோதகுட்டை பகுதியை சேர்ந்த சிவகாமி மற்றும் ஊர் பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர் முறைகேட்டில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனவில் கூறியதாவது வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தளபொறுப்பாளராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதிமுக வார்டு உறுப்பினர் பாரதி என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு வராத நபர்களுக்கு 100 நாள் வேலைதிட்டம் பணியாளர்கள் பதிவேட்டில் ஆப்சன்ட் போடாமல் புள்ளி வைப்பதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு வேலைக்கு வந்தது போல் கணக்கு எழுதப்பட்டு அவர்களுக்கு வாரத்திற்கு 300 ரூபாய் பணத்தை வழங்கிவிட்டு மீதமுள்ள பணத்தை பாரதி கமிஷனாக எடுத்து கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் இதே போன்று பாரதி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மீது துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அவரை பணித்தள பொறுப்பாளர் பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மேலும் வார்டு உறுப்பினராக உள்ள பாரதி சட்டப்படி பணிதள பொறுப்பாளர் பணியை செய்யக்கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பேட்டி: சிவகாமி

Exit mobile version