சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பாக ஆயுத பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற மீட்பு பணி வாகனங்களை சுத்தம் செய்து வாழைத் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டதுடன், ஆண்டவனை வழிபாடு நடத்திய பின்பாக தீயணைப்பு வீரர்களை வரிசையாக நிற்க வைத்து கண் திருஷ்டி விலக தேங்காயுடன், திருஷ்டிக் காயையும் சுற்றச் செய்து உடைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தீயணைப்பு வாகனங்களுடன், மீட்பு பணி வாகனங்களும் நகரின் முக்கிய சாலைகளின் வழியே ( ரோடு ஷோ போன்று ) அபாய ஒலி( சைரனுடன்) எழுப்பியபடி வரிசையாக அணிவகுத்து சென்ற நிகழ்வு சாலையில் சென்ற பொதுமக்களை பீதியடைய செய்தது.