கோயிலுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக பொதுமக்கள் புகார், பாதையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் ஸ்ரீ விருமாண்டி கோயில் அமைந்துள்ளது இந்த கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 25க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குலதெய்வமாக விளங்கி வரும் இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இரும்பு வேலி வைத்து அடைத்துள்ளனர். இதன் காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது. மேலும் வழிபாடு தடைபட்டுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயிலுக்கு செல்லும் பாதையை மீட்டு தர வேண்டும் என்று கீழப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் , ஆலய வழிபாடு குழுவினர் இன்றைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பாதையை மீட்டு தராவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
பைட்: –
மூர்த்தி பொதுமக்கள்
