விழுப்புரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கட்சி பணிகளில் செயல்பட விடாமல் புறக்கணிப்பதாக தெரிவித்து கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜானாமா செய்வதாக கடிதம் எழுதி தலைமைக்கு அனுப்ப உள்ளதாக விழுப்புரம் நகர தெற்கு செயலாளர் பசுபதி தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் சீட்டு விவகாரத்தில் சி.வி.சண்முகம் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட விழுப்புரம் நகர தெற்கு நகர செயலாளர் பசுபதி, சண்முகத்திற்கு எதிரான அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பசுபதி, நான் நகர செயலாளர் பதவியில் உள்ள என்னை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி விழுப்புரம் வந்த நிகழ்வில் என்னை உட்கார கூட வைக்க வில்லை எனவும் என்னை போன்ற பலர் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடவுள் நம்பிக்கை உள்ள அவரை கடவுள் சும்மா விடமாட்டார் என தெரிவித்த அவர் சி.வி.சண்முகம் அவரின் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணன் தலையீடு கட்சியில் அதிகமாக பாதிக்க கூடிய வகையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் என்னை போன்று ஏராளமானோர் அதிமுகவில் அதிர்ப்தியாளர்கள் உள்ளதாகவும் அவர்களின் குரலாக தான் பேசி வருகின்றேன்,விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியரும், ஆதிதிராவிடர்களும் பெரும்பாலும் உள்ளனர். ஆனால் ஆதி திராவிடர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் பதவி கூட இந்த மாவட்டத்தில் இல்லை, ஆனால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள உடையார் சமூகத்திற்கு 5 ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் சிவி சண்முகம் கட்சி பணிகளில் என்னை செயல்பட விடாமல் புறக்கணிப்பதாக தெரிவித்து கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜானாமா செய்வதாக கடிதம் எழுதி தலைமைக்கு அனுப்ப உள்ளதாக விழுப்புரம் நகர தெற்கு செயலாளர் பசுபதி தெரிவித்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
