பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்க்கும் வட மாநிலத்தினர்- கண்டுகொள்ளாமல் சென்ற தென்னக ரயில்வே பொது மேலாளர் – எல்லாமே செட்டப்பா..? அதிர்ச்சியில் உறைந்த ரயில் பயணிகள்..
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் R.N. சிங் அம்ரித் பாரத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அவருக்கு திருவாரூர் ரயில் பயணிகள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பளித்தனர். தொடர்ந்து நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட திருவாரூர் ரயில் நிலையம் புதிதாக புனரமைக்கப்பட்ட வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது திருவாரூர் ரயில் நிலைய நடைமேடை மேம்படுத்தும் பணிக்காக வட மாநிலத்தினர் வேலை செய்து கொண்டிருந்தனர். திருவாரூர் ரயில் நிலையத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஆபத்தான முறையில் வட மாநிலத்தினர் வேலை பார்த்ததை கண்டும் காணாமல் சென்றார் தென்னக ரயில்வே பொது மேலாளர் R.N.சிங். கையில் கிளவுஸ், மாஸ்க் உள்ளிட்ட அடிப்படை உபகரணங்கள் இல்லாமலும், மின் சாதனத்தில் பிளக் கூட இல்லாமல், ஆபத்தான முறையில் ஒயர் மூலம் மின்சாரம் பெற்று வேலை செய்கின்றனர்.
இதேபோல் தென்னக ரயில்வே பொது மேலாளரை வரவேற்பதற்காக மதியம் 1 மணி முதல் ரயில்வே போலீசார் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை நடத்தினர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதனை பார்த்த ரயில் பயணிகள் எல்லாமே செட்டப்பா..? தங்கள் உயர் அதிகாரி வருவதற்காக முறையான ஏற்பாடுகளை செய்யாமல் இவ்வாறு மோசடித்தனமாக செய்வதா.?என புலம்பியபடியே சென்றனர்.
