மயிலாடுதுறையில் ஊராட்சி செயலர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் :-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் ஊராட்சி செயலர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் , தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை பணப்பயன் உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் , ஈட்டிய விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு உள்ளிட்டவற்றை தர வேண்டும் , 1966க்கு பிறகு ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து இளநிலை உதவியாளராக பணியேற்றவர்களுக்கு ஊராட்சி செயலர் பணி காலத்தில் 50 சதவீதம் பணிகாலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர்
