இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுகளை கொட்டி சென்ற சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 45 வது வார்டு கார்திகைவடலி ஊரில் உள்ள குளம் அருகாமையில் மர்ம நபர்கள் இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுகளை கொட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது- இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட கார்த்திகை வடலி ஊரில் உள்ள குளத்தின் அருகாமையில் சில நாட்களாக இரவோடு இரவாக மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவு பொருட்களை கொட்டி செல்கின்றனர் இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சட்டி வருகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமானது மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள குப்பைகளை சேகரித்து இருளப்பபுரம் பகுதியில் அமைந்து உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரி குப்பை கிடங்கில் குப்பைகளை சேகரித்து வருகிறது . இருப்பினும் மர்ம நபர்கள் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் இரவோடு இரவாக கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் அருகாமையில் இருக்கும் குளத்திலும் மர்ம நபர்கள் கழிவுகளை சில நேரங்களில் தட்டி செல்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தங்களது வேதனையை தெரிவித்தனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version