கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்மஸ் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் உள்ள பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனிடையே ஆலயத்தின் முன்பு பிரம்மாண்டமான கொட்டகை அமைக்கப்பட்டு இயேசுபிரான் உயிர்த்தெழுக்கும் காட்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மறை வட்ட அதிபர் பேரருடதிரு. தார்சிஸ்ராஜ் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து நள்ளிரவு நிறைவேற்றிய இந்த திருப்பலியில் உலக அமைதிக்காகவும் , இயற்கை சீற்றங்களில் இருந்து மக்கள் பாதுகாக்கப்படவும் , சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் வேண்டியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில்களை அனைவரும் பார்வையிட்டு சென்றனர். மேலும் 3000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட நிலையில் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

















