ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 தமிழ் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை மே 7-ஆம் தேதி அதிகாலை “ஆபரேஷன் சிந்தூர்” எனும் நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மண்ணில் உள்ள பயங்கரவாத முகாம்களை வான்வழித் தாக்குதல் மூலம் அழித்தது.
இந்த தாக்குதல் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும் தைரியத்திற்கும் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான தளபதி விஜய், தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு ராயல் சல்யூட் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.