மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அண்ணன் பெருமாள் கோவில் ஆலயம் அமைந்துள்ளது 108 வைணவ திவ்யதேசங்களில் 39 வது திவ்யதேசம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் . பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டு சாத்துமுறை நடைபெற்றது தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் சொர்க்கவாசல் அருகே எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சொர்க்கவாசல் வழியே பெருமாள் எழுந்தருள கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

















