உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

தி.மு.க கட்சியின் இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட பொருளாளர் தொழுவூர்.நரேஷ்குமார் ஏற்பாட்டில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம்ஆனந்த் தலைமையில் வேப்பம்பட்டு பாலவிகார் மனவளர்ச்சிக் குன்றியோர் மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது மனவளர்ச்சி குன்றியவர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடல் நலத்தோடு நீண்ட காலம் இருக்கவேண்டும் என பிராத்தனை செய்து, பிறந்தநாள் வாழ்த்துப்பாடலை பாடி மகிழ்ந்து நன்றி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி 49 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version