மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியசாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, தருமபுரம் ஆதீன மடாதிபதி தனுர் மாத வழிபாடு மேற்கொண்டார் :-
மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய புண்ணிய மாதமாக இந்துக்கள் கருதுகின்றனர். மார்கழி மாதத்தில் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம், அதன்படி இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, சோடச தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீன 27ஆவது குரு மகா சன்னிதானம் ஶ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று தனுர் மாத சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து மயூரநாதர் ஆலயத்தில் சுவாமி அம்பாள் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

















