பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொரடாச்சேரியில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தி உறுதி மொழி

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொரடாச்சேரியில் பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக கொரடாச்சேரி ரயில் நிலையத்திலிருந்து திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் பேரணியாக புறப்பட்டு சென்ற திமுகவினர், கொரடாச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பேரறிஞர் அண்ணா சிலை முன்பு தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து கமுகக்குடி கிராமத்தில் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்களை ஒன்றிணைத்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக தொரடாச்சேரி ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர் மற்றும் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன் உள்ளிட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version