தை அமாவாசையை முன்னிட்டு, காசிக்கு நிகரான ஆறு இடங்களில் ஒன்றான, மயிலாடுதுறை காவிரி துலா கட்ட தீர்த்த படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர் :-
முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் மறுவாழ்வில் அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. அமாவாசைக்கு புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி எள் கொண்டு திலதர்ப்பணம் அளிப்பது வழக்கம். இதில் முக்கியமான நாளாக தை அமாவாசை கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு காசிக்கு நிகரான 6 இடங்களில் ஒன்றானதும், 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள மயிலாடுதுறை காவிரி துலா கட்ட தீர்த்த படித்துறையில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்கள் ஆசி வேண்டி திலதர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர்.
