பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உரியடிக்கும் போட்டி சில்லி கோடு தாண்டுதல் தவக்களை ஓட்டம், பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் உடன் 10 அடி உயர பொங்கல் பானை மாதிரியுடன் நடைபெற்ற பொங்கல் விழா ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்:-
மயிலாடுதுறை மாவட்டம் மேலயூரை அடுத்த கஞ்சா நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பத்தடி உயர மண்பானை வைத்து அதில் பொங்கல் பொங்குவது போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அருகில் கட்டப்பட்டு மாடுகள் கரும்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியத்தை வளர்க்கும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சில்லி கோடு தாண்டுதல், பலூன்களை ஊதி உடைத்தல், மெதுவாக சைக்கிளில் செல்லுதல், தவக்களை ஓட்டம், வளையம் வீசுதல், மண்பானையில் ஓவியம் வரைதல், ரங்கோலி ஓவியப்போட்டி ஆகியவை நடைபெற்றது மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விறகு அடுப்பில் மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் போட்டிகளை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் சிவக்குமார் மற்றும் ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

















