மயிலாடுதுறை அருகே அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து போற அணியில் தமிழ்நாடு இயக்க உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்
மயிலாடுதுறை அருகே அறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து சித்தர்காடு மற்றும் மாப்படுகை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு திமுக ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். பின்னர் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பாக உறுதி மொழியை அனைத்து நிர்வாகிகளும் அண்ணா சிலையின் முன்பு ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட அரசு வழக்கறிஞர் இராம. சேயோன் , சிவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
