டாக்டர் அம்பேத்கர் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக, அதிமுக, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் புதிய பேருந்து நிலையம் அருகே 100 க்கும் மேற்பட்டோருக்கு தண்ணீர் மற்றும் உணவு பொட்டலம் உள்ளிட்டவைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அம்பேத்கரை போற்றும் விதமாக கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



















