தீபாவளி பண்டிகை வருகின்ற 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பு கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான 8 பேர்கொண்ட அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகரத்தில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பு கடைகளில் நடைபெற்ற சோதனையில் காலாவதியான 15 கிலோ இனிப்பு மற்றும் காரம் வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் நகரில் அனுமதி பெற்று இயங்கி வரும் 175 கடைகளில் 70 கடைகளில் தற்போது வரை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இவற்றில் சுகாதாரமற்ற முறையிலும், காலாவதியான இணிப்புகளை விற்பனை செய்த 15 கடைகளுக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில் தெரிவிக்கையில் விழுப்புரத்தில் 175 பேக்கரி மற்றும் இனிப்பு கடைகள் உமர்ம் பெற்றுள்ளதாகவும் 350 பதிவு பெற்ற சின்ன கடை இயங்கி வருவதால் தற்போது வரை உரிமம் பெற்ற 70 கடை சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சோதனையில் தரமற்ற முறையில் இனிப்புகளை தயார் செய்த 15 கடைகளுக்கு 25 ஆயிரம் அபராதம்.
