மத்திய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீர் கண்டனம்

மத்திய அரசு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தியதை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக கண்டித்துள்ளார். இதன் காரணமாக 65 லட்சம் மாணவர்களும், 6 லட்சம் ஆசிரியர்களும் நேரடி பாதிப்புக்குள்ளாவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவது, அவர்களின் சேர்க்கையை உயர்த்துவது, சமத்துவ வாய்ப்புகளை உறுதி செய்வது மற்றும் சமூக, பாலின இடைவெளிகளை குறைப்பது போன்ற முக்கிய குறிக்கோள்களுடன் சமக்ரா சிக்ஷா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் மத்திய அரசு 60% நிதியுதவியும், மாநில அரசு 40% நிதியுதவியும் வழங்குவது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு திடீரென நிதியை வழங்க மறுப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என தெரிவித்தார்.

மேலும், தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக நிதி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version