டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவில் தொடரும் மழை, 12 மணி நேரத்தில் செம்பனார்கோயில் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது :-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழையின் வேகம் அதிகரித்த நிலையில் தற்போது இரவு நேரத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோயில் பகுதியில் 11 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 8 சென்டிமீட்டர் சீர்காழியில் 9 சென்டி மீட்டர் கொள்ளிடம் மற்றும் மணல்மேடு ஆகிய பகுதிகளில் ஆறு சென்டிமீட்டர் மழையும், தரங்கம்பாடியில் மூணு செண்டிபீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து இரவு நேரத்தில் மழை அளவு அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

















