சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் போக்குவரத்தை கண்காணிக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை காவல் ஆய்வாளர் தயாளன் திறந்து வைத்தார்.
திண்டுக்கல்-காரைக்குடி செல்லும் தேசியநெடுஞ்சாலை, மேலூர்-பிரான்மலை செல்லும் நெடுஞ்சாலைகளின் நான்கு ரோடுகள் சந்திப்பு சாலையில் போக்குவரத்துகளை கண்காணிக்க புதிய காவல் கட்டுப்பாட்டு அறை தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவப்பட்டது. அதனை மழை, வெயில் காலங்களில் நின்று போக்குவரத்தை சீர்செய்வதற்காக காவல் ஆய்வாளர் தயாளன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி இன்று சுதந்திர தினம் என்பதால் அபராதம் விதிக்கவில்லை இனிமேல் ஹெல்மெட் அணிந்து தான் வரவேண்டும் ஹெல்மெட் அணிந்தால் தான் எந்த ஒரு விபத்தையும் தவிர்க்கலாம் உங்கள் உயிர் உங்களின் குடும்பத்திற்கு முக்கியம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி காவல் ஆய்வாளர் தயாளன் இனிப்புகளை வழங்கினார்.