அதிமுக-வுடன் கூட்டணி இல்லை.. விஜய் அதிரடி..?

மதுரை, பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாடு இப்போது நடந்து வருகிறது. இம்மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர். 3:45 மணியளவில் மேடைக்கு வந்த விஜய்யை நிர்வாகிகள் கைகொடுத்து வரவேற்றனர். மேடையில் இருந்த சந்திரசேகர் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றனர். பிறகு தொண்டர்களை நோக்கி, விஜய் கையசைத்தும், கும்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.மேடையில் பேசிய விஜய்,

எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக இன்று எப்படி இருக்கிறது? அதிமுக கட்சியை யார் கட்டிக்காப்பது? பொருந்தாக் கூட்டணியாக அதிமுக-பாஜக கூட்டணி உள்ளது. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு செய்யப்படும். 2026-ல் இருவருக்கு மத்தியில் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் கூட்டணிக்காக காத்திருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா? அந்த கட்சி யார் கையில் இருக்கிறது தெரியுமா? எனப்பேசியதன் மூலம் அதிமுகவுடன்ன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தின் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Exit mobile version