NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குப்பம் கிராமத்தில் அனைத்து கிரிக்கெட் வீரர்கள் இணைந்து வருடம் வருடம் ஏபிஎல் என்று சொல்லக்கூடிய கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக 13-வது வருடமாக ஆலங்குப்பம் மைதானத்தில் விளையாட்டை துவக்கி வைத்தார் NFITU தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா தலைமை தாங்கினார் SKS லாரி உரிமையாளர் திரு கார்த்தி அவர்களின் முன்னிலையில் 13 வது ஏபிஎல் கிரிக்கெட் விளையாட்டு இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது இறுதி சுற்றில் ராயல் ஸ்டைக்கர்ஸ் அணியின் தலைவர் திரு ராஜ்குமார் மற்றும் சூப்பர் கில்லிஸ் கேப்டன் திரு அன்பு அவர்களும் இறுதியாக விளையாடி வெற்றி பெற்றார் சூப்பர் கில்லிஸ் கேப்டன் திரு அன்பு அவர்கள் அபாரமாக விளையாடி மூன்று சிக்சர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடித்து அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று மேன் ஆஃப் தி மேட்ச் திரு அன்பு அவர்கள் பெற்றுக்கொண்டார் பிறகு வந்து ராயல்ஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தலைவர் திரு ராஜ்குமார் அவர்களுடைய அணி அனைத்து விக்கெட்டுகளும் இழந்து வெற்றி வாய்ப்பை நழுவி விட்டார்கள் வெற்றி பெற்ற சூப்பர் கில்லி ஸ் அணிகளுக்கு முதல் பரிசு 20 ஆயிரம் ரூபாயும் வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்ட நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் டிரேட் யூனியன் மாநில பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா மற்றும் எஸ் கே எஸ் லாரி உரிமையாளர் திரு கார்த்தி அவர்கள் இருவரும் இணைந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினார்கள்.பின்பு ராயல் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி இரண்டாவது பரிசை 15 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை பெற்றுக் கொண்டனர் தொடர்ந்து இத்தனை வருடங்களாக இந்த கிரிக்கெட் விளையாட்டை சீறும் சிறப்புடன் நடத்தி வரும் திரு விஜயகுமார் மதன்குமார் ராம்கி அன்பு ரமேஷ் ஆகியவரின் முயற்சியில் தொடர்ந்து வெற்றிகரமாக இந்த கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்று வருகிறது மற்றும் கிரிக்கெட் விளையாட்டை தங்கு தடையின்றி நடத்துவதற்கு போதிய உபகரங்களும் நிதியும் கொடுத்து வருகின்றனர் அதில் முன்னூர் கிராமத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு சங்கர் அவர்கள் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு போதுமான நிதியை வழங்கி இருந்தார். முதல் பரிசாக ஒவ்வொரு வருடமும் எஸ்கே எஸ் உரிமையாளர் திரு கார்த்தி அவர்கள் தொடர்ந்து கோப்பைகளும் போதுமான நிதிகளும் வழங்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு பந்து வசதியை திரு ராஜதுரை அவர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு வருகிறார் ஜிஎஸ்ஆர் ப்ளூ மெட்டல்ஸ் ஓனர் திரு சிவா அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு போதுமான நிதியை கொடுத்திருந்தார் திரு முத்துக்குமரன் லாரி உரிமையாளர் அவர்கள் தொடர்ந்து இந்த பொங்கல் காலத்தில் நடக்கின்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் தண்ணீர் இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார் NFITU தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் திரு ஆலங்குப்பம் பாலா பேசுகையில் அடுத்த வருடங்களில் பொங்கல் நாட்களில் மிகச்சிறப்பாக ஆலங்குப்பம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளையும் உருவாக்கி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மேடை அமைத்து பரிசுகளை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பிறகு ஆலங்குப்பம் கிராமத்தில் வருடாந்தோறும் இளைஞர்கள் சறுக்கு மரங்கள் ஏறிய முதல் நபர் திரு திவாகரன் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
