நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்
மாமல்லபுரம்: நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் மாமல்லபுரம் அருகே, கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
ஆனால், கோவளத்தை தவிர்த்து மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியில் பக்கிங்காம் கால்வாய் (உபவடிவ நிலத்தில்) புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி ரூ.342.6 கோடியில் 6வது புதிய நீர்த்தேக்க கட்டுமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி தொடங்கி வைத்தார் . இவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் உடன் இருந்தனர்.
மு க ஸ்டாலின் பேச்சி வீடியோவில் உள்ளது
.
