குஜிலியம்பாறையில் புதிய மாவட்ட  நடுவர் நீதிமன்றம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுக்காவில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (District Munsif-cum-Judicial Magistrate Court) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற திறப்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதியரசர் திரு. மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா அவர்கள் காணொளி மாநாடு மூலம் புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்து தலைமை உரையாற்றினார்.

துவக்க நிகழ்ச்சியில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி A. முத்துசாரதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையிலிருந்து காணொளி வாயிலாக மாண்புமிகு நீதியரசர்கள் P. வேல்முருகன்,. N. ஆனந்த், வெங்கடேஷ், கிருஷ்ணன், ராமசாமி, Dr. R. மஞ்சுளா,. ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சிறப்புரையாற்றினர். குஜிலியம்பாறை போன்ற விரைவில் வளர்ந்து வரும் தாலுக்காவில் நீதித்துறை சேவையை மக்கள் நெருக்கமாக பெற இது பெரும் முன்னேற்றம் என அவர்கள் வலியுறுத்தினர். 

விழாவின் முடிவில் தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமதி V. தீபா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்: மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரதீப், வேடசந்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முருகேசன் செயலாளர் பாலமுருகன் திண்டுக்கல் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Exit mobile version