மயிலாடுதுறையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 109வது ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 109வது ஜெயந்தி விழா.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கடை தெருவில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 109 ஆவது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கலைவாணன், இளைஞரணி செயலாளராக அருண்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.இதில் மாவட்ட தலைவர் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.அப்போது மாவட்ட மாணவரணி செயலாளர் ஞானசேகர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Exit mobile version