நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர்R.காமராஜ்&பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்

நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் காமராஜ் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும்..
இலவச கண் பரிசோதனை முகாம்.. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் துவக்கி வைத்தார்..”
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர் காமராஜ்..அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது..
இந்த முகாமினை..திருவாரூர் அதிமுக மாவட்டச் செயலாளரும்.. கழக அமைப்புச் செயலாளரும்…
நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் துவக்கி வைத்தார்..
இந்த இலவச கண் பரிசோதனை முகாமில்… கண் புரை, கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட நோய்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது..
மேலும் குழந்தைகளின் கண் நோயான பிறவி கண்ணீர் அழுத்த நோய் மற்றும் மாலைக்கண் ஆகிய நோய் உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.. மேலும் முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்ட நோயாளிகளை பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சை, மருந்து தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்..

மேலும் இந்த நிகழ்வில்.. வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், பேரூர் கழக செயலாளர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாச ஜெயபால், மாவட்ட மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் எம் ஜி ஆர் கருப்பையன்..

மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்
இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது.

Exit mobile version