கரூரில் கடந்த 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது அப்பொழுது 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியினர்.
கரூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது அப்பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படத்திற்கு மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் செல்வ நன்மாறன் தலைமையில் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் செல்வ நன்மாறன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கடந்த 27 ஆம் தேதி அன்று விஜய் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிய நிலையில் அவர்களின் உயிரிழப்பானது அதற்கு யார் காரணம் என்று மக்களிடம் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது
மதியம் 12 மணிக்கு அனுமதி கேட்டு விட்டு மாலை ஏழு மணிக்கு விஜய் அப்பகுதிக்கு வந்துள்ளார் அப்பொழுது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் இந்த உயிர் இழப்புக்கு யார் காரணம் என்று சொன்னால் இந்த நிகழ்ச்சியை சரியாகஒருங்கிணைப்பு செய்யாமல் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் காரணம் சரியான பாதுகாப்பு வழங்காத தமிழக காவல்துறை தான் காரணம் பொதுமக்களின் உயிரிழப்புக்கு இவர்கள் இருவருமே பொறுப்பேற்க வேண்டும் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்க வேண்டும் சம்பவம் நடந்த இடத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வரும் பொழுது அருகிலேயே தனியார் மருத்துவமனையில் இருக்கும் பொழுது அங்கு அழைத்துச் செல்லாமல் இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரமாக உள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
108 ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலையில் அருகிலேயே நான்கு தனியார் மருத்துவமனைகள் உள்ள நிலையில் எங்கிருந்து ஏன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது இறந்தவர்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்த பிறகும் உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் உடற்கூறு ஆய்வு அறிக்கை இன்று வரை வழங்கவில்லை மத்திய அரசு ஆணையக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும்.
உறவினர்களிடம் உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் உள்ளதா என்பதை காட்டாமலேயே அவசர அவசரமாக உடர்குற ஆய்வு செய்தது ஏன் எனவும், சமூக வலைத்தளங்களில் விஜய் வருவதற்கு முன்பாகவே செந்தில் பாலாஜியின் கோட்டைக்குள் கால் வைத்து பார் என்ன நடக்கிறது என்று பார் என்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக வெற்றி கழகம் அரசியல் செய்கிறது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் அளிக்காமலும் அவர்களுக்கு உதவி செய்யாமலும் இருப்பது அண்ணாவை வைத்து கட்சி நடத்தும் திமுகவும் சரி தமிழக வெற்றிக்கழகமும் சரி அண்ணா கூறியதைப் போல மக்களிடம் செல்,மக்களுக்கான அரசியல் செய் இந்த இரண்டு கட்சிகளும் மக்களிடம் செல்லாமல் மக்களின் சார்பில் இரு கட்சிகளும் அரசியல் செய்கின்றன என்று தெரிவித்தார்.