திருத்தணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ் எஸ் சந்திரன் இருசக்கர வாகனத்தில் வந்து திருத்தணி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது இந்த நிலையில் இன்று திருத்தணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் எஸ் எஸ் சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தார். ஏ எஸ் பி சுபம் திமான் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பானில் ஈடுபட்டு வருகின்றனர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களை தீவிர சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ் எஸ் சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

















