மரக்கன்றுகள் வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிய நாம்தமிழர் கட்சி வேட்பாளர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டசபை தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக சுபாஷ்(28) என்பவரை கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதனையடுத்து நேற்று வேட்பாளர் சுபாஷ் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி ஆதரவு திரட்டினார். பின்னர் சுபார்ஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளதால்
சீர்காழி அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக வேண்டும், சீர்காழி சட்டசபை தொகுதியில் உள்ள திருவாலி, பெருந்தோட்டம் ஏரிகளை தூர்வாரி சுற்றுலாமையமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். 2026 தேர்தலில் மக்களுடன் 234 கூட்டணி வைத்துள்ளோம். தீமைக்கு மாற்று தீமை கிடையாது. டாஸ்டாக் கடைகளை திறக்க கூடாது என்று கூறுகிறோம் எங்களுடன் யார் கூட்டணி அமைக்க வருவார்கள். திராவிட கட்சிகள் கரைபடியாக கட்சிகள் கிடையாது. மாற்று அரசியல் என்று சொல்லும்போது ஆண்ட கட்சிகளுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும். மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி விவசாயி சின்னத்தில் வாக்களிக்க மக்களிடம் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.

















