பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர், பூம்புகார் எம்எல்ஏ வழங்கினர்:-
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம்; இணைந்து 20.12.2025 பொறையாரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 70-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் 5 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள்; கலந்துகொண்டன. 18 வயதுக்கு மேற்ப்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 2800க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் 600க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 224 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 55 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு விழாப்பேருரை வழங்கி முகாமில் பணிநியமனம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுனசுந்தரி, மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் சீனிவாசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன், தரங்கம்பாடி பேரூராட்சியின் துணைத்தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

















