“மாநில அளவிலான சதுரங்க போட்டி.. 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து.. 600-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு..”
திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக..இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெறுகிறது..இன்று ஒரு நாள் நடைபெறும் போட்டிகளில்…
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்கள் மேலாக… 600-க்கும் மேல் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
7,9,11,13,15 வயதுகள்(கேட்டகிரி) பிரிவினர்…மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொது பிரிவு போட்டியாளர்கள்.. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்கின்றனர்..
கேட்டகிரி பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் நினைவு கோப்பைகளும்.. பொது பிரிவில் வெற்றி பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாயும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
மாநில அளவில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வருகின்ற அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஆறாம் தேதி வரை நான்கு நாட்கள் திருவாரூரில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளனர்.
இந்த போட்டியை திருவாரூர் மாவட்ட எஸ் எஸ் சதுரங்க அகாடமி.. தலைவர் செந்தில்குமார்.. செயலாளர் சரவணன்.. மற்றும் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக உயர்மட்ட ஆலோசகர் முரளி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
