திருவாரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு பயிற்ச்சி பட்டறை மாவட்ட கழக செயலாளர் ராஜராஜன் தலைமையில் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட அதிமுக இளம் பெண் பாசறை நிர்வாகிகள் மற்றும் அமமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாற்று கட்சியிலிருந்து 150க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில். தங்களை இணைத்துக்கொண்டனர். . நிகழ்வில் மன்னார்குடி நகர கழக செயலாளர் ரஞ்சித் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் முகுந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர் .















