மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி எம் எல் ஏ விளையாடி அசத்தல்
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக விளையாட்டு அணி சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது விழுப்புரம் கலெக்டர் பெருந்துட்டவளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த போட்டியில் தமிழக முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம் எல் ஏ முதல் பரிசாக பெங்களூர் அணிக்கு 15000
2 இடம் பிடித்த திருச்சி அணைக்கு 10,000
3 மற்றும் நான்காம் இடம்பிடித்த அணிகளுக்கு தலா 7000 பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மேற்கு மகேஸ்வரன் செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் நகர மன்ற உறுப்பினர் சாந்தராஜ் புல்லட் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் போட்டியில் முன்னதாக லட்சுமணன் எம் எல் ஏ விளையாட்டு வீரர்களோடு அவர்களுக்கு இணையாக விளையாடி அசத்தினார்
















