மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார் .
2026 தமிழக 17வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது . தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் யோகேஸ்வரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் . முன்னதாக மன்னார்குடி தேரடியிலிருந்து. திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பேரணியாக சென்று சாலையில் சென்ற பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் .
