ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல் தான் அனைத்து அரசியல் கூட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி வழங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்ப்பது உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து தான் காவல்துறை அனுமதி வழங்கி வருகின்றனர். கேட்கும் இடத்தில் எல்லாம் அனுமதி கொடுக்க முடியாது.நடிகர் விஜய் சொல்வது போல் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு பாரபட்சம் பார்த்து அனுமதி வழங்குவது கிடையாது என நெல்லையில் அமைச்சர் கே என் நேரு பேட்டி.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு நாவல் மரங்கள் நடும் நிகழ்ச்சியில் நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு நாவல் மரங்களை மாவட்ட ஆட்சியர் சுகுமார், சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து நடவு செய்தார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு., அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது மக்களை பற்றி கவலைப்பட்டதால் தான் வீட்டில் உள்ளார்.
அவர் மக்களைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் ஏன் அவர் வீட்டுக்கு சென்று இருப்பார்.திமுகவை பற்றி பேசுவதற்கு எந்த வாய்ப்பும் எதிர்கட்சிகளுக்கு இல்லாததால் திமுக குறித்து ஏதேதோ பேசி வருகிறார்கள். விஜய் சொல்வது போல் பொது கூட்டங்களுக்கு தமிழக அரசு பாரபட்சம் எதுவும் பார்க்காமல் அனுமதியை அனைவருக்கும் கொடுக்கிறது. திமுகவினர் கூட்டம் நடத்தினாலே பல்வேறு அனுமதிகள் பெற்று தான் கூட்டம் நடத்தப்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு பொதுமக்களுக்கான இடைஞ்சல் உள்ளிட்டவைகளை பார்த்து தான் அனுமதி காவல்துறை மூலம் வழங்கப்படுகிறது.
தவிர்க்க முடியாத இடத்தில் அனுமதி கொடுக்கப்பட்டாலும் மாற்று வழியை ஏற்படுத்தி விட்டு தான் காவல்துறை அனுமதி கூட்டங்களுக்கு கொடுக்கப்படுகிறது. திமுகவாக இருந்தாலும் அதே நடைமுறையை பின்பற்றித்தான் காவல்துறை அனுமதி கொடுக்கப்படுகிறது. நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும் முறை ஏதோ அதனை பின்பற்றி தான் அனுமதி வாங்குகிறோம். எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது பலமுறை கூட்டங்கள் நடத்த எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் சொன்ன இடத்தில் தான் நாங்கள் கூட்டம் நடத்தினோம்.
காவல்துறை உரிய ஆய்வு நடத்தி தான் அனுமதி கொடுக்கிறது போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தான் கேட்கும் இடத்தில் அனுமதி கொடுக்காமல் ஆய்வு நடத்தி அனுமதியை குறிப்பிட்ட இடத்தில் வழக்குகிறார்கள். இந்த நடைமுறை திமுக விற்கு மட்டுமல்ல அனைத்து கட்சியையும் ஒரே நிலையில் தான் காவல்துறை கொடுத்து வருகிறது. 158 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்னாகுடி பெரியகுளம் பராமரிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை கேட்டறிந்துள்ளோம் சி எஸ் ஆர் நிதி மூலம் உடனடியாக குளத்தை தூர் வாருவதற்கான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்
