கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி கலையரங்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில் இன்றைய நாள் தமிழ்நாட்டு நாள் இந்த தமிழ்நாட்டு நாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் தமிழ் மொழியை இன்னும் உயர்த்தி பிடிக்கக் கூடிய பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
தாய்மொழி தமிழில் ஒரு கான்செப்ட் புரிந்து விட்டது என்றால் அதில் மாணவர்களின் அறிவை பயன்படுத்தி ஆங்கிலத்திலும் கன்வர்ட் செய்து கொள்வார்கள் கான்செப்ட் புரிந்து விட்டால் போதும் மாணவர்கள் அதன் பிறகு எத்தனை போட்டி தேர்வுகள் வந்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள்.
என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதாகவும், தமிழகத்தில் வரும் ஜூலை 24ஆம் தேதி தமிழக முதல்வர் 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாகவும் 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணி நியமன ஆணைகள் இது என்றும், கல்வியின் தேவை எங்குள்ளதோ அங்கு முதலில் முன்னுரிமை அளித்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் ஹைடெக் லேப் உள்ளிட்ட பல்வேறு விதமான தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக ஆசிரியர்களின் பணியை குறைக்க வேண்டும்.
என்பதற்காக இது போன்ற சில திட்டங்களை அரசு கொண்டு வரும்போது இதனை ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எத்தனை டெக்னாலஜி வந்தாலும் ஒரு வகுப்பறையில் ஒரு ஆசிரியர் நின்று பாடம் நடத்துவதற்கு ஈடாகாது ஏனென்றால் மனித உணர்வை மனித உணர்வால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்..