திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூரில் செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்துள்ளேன் மீதமுள்ள அனைத்து திட்டங்களையும் கொண்டுவருவதற்கு பொதுமக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோட்டூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து பேச்சு..
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூரில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியான திமுக, காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள் கட்சி , சிபிஐ , சி.பி.எம், தேமுதிக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க.மாரிமுத்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு பேசினார் அப்போது கடந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளேன் குறிப்பாக முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி திருத்துறைப்பூண்டியில் விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக விளையாட்டு அரங்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை என்னால் முடிந்த வரை மேம்படுத்தி வந்துள்ளேன் பெரும்பான்மையான திட்டங்களை கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளேன் இந்த ஆண்டு இந்த மீதமுள்ள திட்ட பணிகளை விரைந்து முடித்திட எனக்கு மீண்டும் பொது மக்களாகிய நீங்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்
