திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கத்தூர் சசிகுமாரை சந்தித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற (SSA) திட்டத்தின்படி
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு 15 தலைவர்கள் விருப்பமான அளிக்கப்பட்டு போட்டியிட்டனர்
அந்த விருப்ப மனுக்களை பரிசீலனை செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதன் (AICC) பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தலைமையில் தமிழகத்திலுள்ள மொத்தம் 77 காங்கிரஸ் மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்குப் புதிய தலைவர்களின் பட்டியிலை வெளியிட்டார்
அதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக வெங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் சசிகுமார் நியமிக்கப்பட்டார்,
புதிதாக மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள சசிகுமாரை காங்கிரஸ் நிர்வாகிகள் அதன் கூட்டணி கட்சி சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என அவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி கைகுலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்














