மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. பாலத்தின் உறுதித் தன்மைக்காக ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. பாலத்தின் நடுவில் இருந்த இரும்பு பேரிங்குகள் மீண்டும் புதிதாக மாற்றப்பட்டது. மேலும் விரிசல் பகுதிகள் சீரமைக்கப்பட்டன. இந்த பணிக்காக கடந்த மூன்று மாத காலமாக பாலம் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்கள் போக்குவரத்துக்காக பாலத்தை அமைச்சர் மெய்யநாதன் இன்று கொடியசைத்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.ஆர் சுதா, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாலம் உறுதித் தன்மை உடன் இருக்கும் என்று அப்போது அமைச்சர் தெரிவித்தார்.
பராமரிப்பு பணிக்காக மூன்று மாத காலமாக மூடப்பட்டிருந்த மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் மீண்டும் திறக்கப்பட்டது
-
By Satheesa

- Categories: News
- Tags: district newsmayiladuthuraitamilnadu
Related Content
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
By
Satheesa
May 3, 2026
திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்
By
Satheesa
May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
By
Satheesa
May 3, 2026